May 13, 2009

மனதிற்கு எஜமானாகுங்கள்!


சென்ற 'எளிய தியானம்' பதிவை படித்து விட்டு 'விழிப்புணர்வு' என்றால் என்ன என்று சிலருக்கு ஐயம் வந்துள்ளது.

திடீரென எனக்கு ஜிலேபி பற்றி ஒரு எண்ணம் வருகிறது. உடனே ஜிலேபியின் இனிப்பு உணர்வு கூடவே நினைவுக்கு வருகிறது. தொடர்ச்சியாக ஒரு நாள் ஜிலேபி வாங்கி தராமல் ஏமாற்றிய என் நண்பனை பற்றிய எண்ணமும் எழுகிறது. அடுத்தது அவன் மீது கோப உணர்வு ஏற்படுகிறது.

நம் மனம் தொடர்ச்சியாக எண்ணங்களையும், உணர்வுகளையும் உற்பத்தி செய்தவாறு இருக்கிறது.

மனதின் வேலையே அது தான். இரவும், பகலும் நாம் தூங்கும் நேரம் உட்பட மனம் இயங்கி கொண்டிருக்கிறது. அதை தான் கனவு என்கிறோம்.

இந்த எண்ணங்களுக்கு நமது மூளை மூலமாகவும், உணர்வுகளுக்கு இதயம் மூலமாகவும் இருக்கிறது.

ஆனால் இந்த மனமும், உணர்வும் நான் என்ற மையம் அல்ல.

இந்த பதிவு எழுதும் போது உதிக்கும் எண்ணங்களும், இதை படித்து வெறுப்படையபவர்களுக்கு ஏற்படும் உணர்வும் 'நாம்' அல்ல.

நான் என்ற மையம் இவை இரண்டையும் தாண்டி நமக்குள் உள்ளது.

அது தான் உண்மையான 'நான்'

அது தான் எஜமான்.

ஆனால் நாம் 'நம்மை' மறந்து நமது மனதின் பின்னால் சென்று கொண்டிருக்கிறோம்.

மனம் என்னும் வேலைக்காரன் தன்னை எஜமானனாக பாவித்து கொண்டிருக்கிறான்.

ஏனென்றால் எஜமான் உறங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த வேலைக் காரன் தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம். ஏனென்றால் அவனது இயல்பே அது தான்.

ஆனால் ஒரு முறை எஜமான் எழுந்து ஒரு பார்வை பார்த்தால் போதும்.

வேலைக்காரன் அடங்கி விடுவான்.

அதற்கப்புறம் தன்னுடைய 'வேலைத்தனங்களை' அடக்கிக் கொண்டு எஜமானனின் கட்டளைக்கு உற்பட்டு வேண்டும் போது மட்டும் முன்பை விட திறனுடன் வேலை செய்வான்.

ஆகவே இந்த மனம் என்னும் வேலைக்காரனின் செயல் பாட்டை நம் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.
அதற்கு நாம் நம்மை உணர வேண்டும்.

அது தான் விழிப்புணர்வு.

எண்ணங்கள் தவிர்த்த வெற்று உணர்வில் மையம் கொள்வது தான் விழிப்புணர்வு.

அதனை அறியத் தான் தியானம் அவசியம்!

பிடித்திருந்தால் கீழே உள்ள தமிலிஷ் ஓட்டும், மேலே தமிழ் மண பரிந்துரையும் செய்ய தயங்க வேண்டாம்.

6 comments:

வால்பையன் said...

தியானம்னா என்ன?

ஏற்கனவே எழுதியிருந்தா லிங்க் கொடுங்க!

Vishnu - விஷ்ணு said...

// இந்த பதிவு எழுதும் போது உதிக்கும் எண்ணங்களும், இதை படித்து வெறுப்படையபவர்களுக்கு ஏற்படும் உணர்வும் 'நாம்' அல்ல.

நான் என்ற மையம் இவை இரண்டையும் தாண்டி நமக்குள் உள்ளது.


// மனதின் வேலையே அது தான். இரவும், பகலும் நாம் தூங்கும் நேரம் உட்பட மனம் இயங்கி கொண்டிருக்கிறது. அதை தான் கனவு என்கிறோம். //

கனவுல நல்ல கனவு, கெட்ட கனவுன்னு சொல்லுறாங்களே? கெட்ட கனவு வந்த கெட்டவனா?

அது தான் உண்மையான 'நான்' //

நம்ம அறிவுக்கு எட்டமாட்டீங்குது. கொஞ்சம் விளக்கமா சொன்ன நல்லாயிருக்கும்.

// எனக்கு ஜிலேபி பற்றி ஒரு எண்ணம் வருகிறது. உடனே ஜிலேபியின் இனிப்பு உணர்வு கூடவே நினைவுக்கு வருகிறது. தொடர்ச்சியாக ஒரு நாள் ஜிலேபி வாங்கி தராமல் ஏமாற்றிய என் நண்பனை பற்றிய எண்ணமும் எழுகிறது. அடுத்தது அவன் மீது கோப உணர்வு ஏற்படுகிறது. //

ஆஹா ஜிலேபி ஞாபகம் வந்துட்டது. என்னோட மனசும் வேலை செய்யுது.

முக்கோணம் said...

வாருங்கள் உயர்திரு வால்பையன்,

தங்கள் கேள்விக்கான பதிலை பின்வரும் சுட்டியை தட்டி படித்து பாருங்கள்:

http://mukkonam.blogspot.com/2009/05/blog-post_09.html

மேலும் விளக்கத்தை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

முக்கோணம் said...

விஷ்ணு அவர்களே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்கள் ஐயத்திற்கான பதில்களை வரும் பதிவுகளில் விவாதிப்போம்.

வடுவூர் குமார் said...

அருமையான சப்ஜெக்ட் ஆனால் இதில் நீந்தி கரை காண தொடர் முயற்சி வேணும்.

நாமக்கல் சிபி said...

//எண்ணங்கள் தவிர்த்த வெற்று உணர்வில் மையம் கொள்வது தான் விழிப்புணர்வு//

சூப்பர்!

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...