உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நீஙகள் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் விளைவுகளை ஏற்படுத்தவல்லது.
எண்ணங்களே வாழ்க்கையின் சிற்பி என்று அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ளார்.
நீங்கள் எண்ணுவது போலவே நீங்கள் உங்கள் நடைமுறை வாழ்க்கையில் செயல்பட்டு, அதற்கான விளைவுகள் ஏற்படுவது ஒரு புறம் இருப்பினும், இந்த பிரபஞ்சத்தில் உங்களது எண்ணம் ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது.
அந்த அதிர்வுக்கும் விளைவுகள் உண்டு.
பிரபஞ்சம் அதற்கான விளைவுகளை நமக்கு சூழ்நிலைகள் மூலமாக தருகிறது.
நல்லெண்ணத்துக்கு நல்ல விளைவும், தீய எண்ணத்துக்கு தீய விளைவும் ஏற்படும் எனபது உண்மை.
நல்ல எண்ணங்கள் நல்ல சூழ்நிலைகளையும், நல்ல மனிதர்களையும் நம்முடன் இணைத்து விடும்.
ஆகவே தான் நமது முன்னோர்கள் நாம் எப்போது நல்லவற்றையே நினைக்க வேண்டும் என்று வலியுறுத்திகின்றனர்.
அதற்கு ஒரே வழி அருட்தந்தை கூறிவது போல் நல்ல எண்ணங்களை விரும்பி முயன்று மனதில் இருத்த வேண்டும்.
தொடர்ந்து நல்ல எண்ணங்களை மனதில் எண்ணி வர வர நமது வாழ்க்கையில் நாம் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை கண் கூடாகவே காணலாம்.
பயிற்சியினால் எதுவும் முடியும்.
இந்த நற்கருத்து அனைவருக்கும் பரவ கீழே உள்ள தமிழிஷ் ஓட்டு பொத்தானை அழுத்துவதும், மேலே உள்ள தமிழ் மண பரிந்துரை இணைப்பை அழுத்துவதும் கூட ஒரு நல்ல எண்ணமே.
12 comments:
// தொடர்ந்து நல்ல எண்ணங்களை மனதில் எண்ணி வர வர நமது வாழ்க்கையில் நாம் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை கண் கூடாகவே காணலாம். //
உண்மையான உண்மை
//நல்ல எண்ணங்கள் நல்ல சூழ்நிலைகளையும், நல்ல மனிதர்களையும் நம்முடன் இணைத்து விடும்.//
உண்மையான வரிகள்
ஆதரவுக்கு நன்றி விஷ்ணு..
////நல்ல எண்ணங்கள் நல்ல சூழ்நிலைகளையும், நல்ல மனிதர்களையும் நம்முடன் இணைத்து விடும்.//
உண்மையான வரிகள்//
நன்றி வசந்த்..நீங்கள் இங்கு பின்னூட்டம் இட்டதின் மூலம் நானும் கொஞ்சம் நல்ல எண்ணங்கள் எண்ணியிருக்கிறேனோ என்று நினைக்கிறேன்.
நல்ல பதிவு பாஸ்..
நன்றி..தீப்பெட்டி பாஸ்..உங்க ஆதரவு அவசியம் வேணும்..
நல்ல பதிவு! நன்றி!
வாழ்க வளமுடன்.வாழ்க வையகம். நன்றி.
"நல்லெண்ணம் வளர்ப்போம்!" - என்ற தலைப்பில் சென்ற அக்டோபரில் என் வலைப்பதிவில் எழுதிய அறுசீர் மண்டிலப் பாடல்களில் இக் கருத்துக்களைக் காணலாம்!
http://thamizhanambi.blogspot.com/2008/10/blog-post_18.html
அன்பன்,
தமழநம்பி.
நன்றி மோகன்..ஆதரவு தொடரட்டும்..
வருகைக்கு நன்றி தங்கமணி..
நன்றி தமிழநம்பி..உங்கள் பதிவை படித்து பின்னூட்டம் இட்டுள்ளேன்.
Post a Comment