நாம் வழக்கமாக நம்மை சுற்றி ஏற்படும் சூழ் நிலைகளில் நம்மை இணைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறோம்.
ஆனால் நமது சூழ் நிலைகளை நாமே உருவாக்க முடியும் என்பதை உணர வேண்டும்.
நமது சூழ் நிலைகளுக்கு நாமே பொறுப்பு. நாமே அதனை நிர்ணயிக்க கூடிய தலைவர்.
இது வரையிலும் நமது பதிவுகளில் எண்ணங்கள் ஈர்ப்பு சக்தி உடையன, அவை சூழ் நிலைகளை, மனிதர்களை கவரும் தன்மை உடையன என்பதை அடிக்கடி விவாதித்து வருகிறோம்.
அனைத்திற்கும் ஆணி வேர் எண்ணங்களே!
நமது எண்ணங்கள் எப்போதும் கவலை, பயம், பதட்டம், குழப்பம், சோம்பேறித்தனம் என்று எதிர் மறையாக இருந்தால் சூழ் நிலைகளும் அதே போல் அமையும்.
அதற்குப் பதிலாக எப்போதும் நேர் மறை எண்ணங்களான அனைவருக்கும் நல்லதை நினைத்தல், தன்னம்பிக்கை, துணிவு, மகிழ்ச்சி, அமைதி, சுறுசுறுப்பு என்பனவற்றை கொண்டிருந்தால்
நம்மை சுற்றி நல்ல மனிதர்களும், சூழ் நிலைகளும் அமைவதை காணலாம்.
எதிர் மறை எண்ணங்கள் ஏற்படுவதை கவனித்து தன்னம்பிக்கை தரும் எண்ணங்களை எண்ண மனதை பயிற்றுவிக்க வேண்டும்.
அதற்கு விழிப்புணர்வு அவசியம். விழிப்புணர்வின் மூலம் பிறரின் எண்ணங்கள், செயல்களிலிருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாம்.
நமது எண்ணங்கள் நம்மை மட்டுமின்றி சமுதாயத்தையும் பாதிக்கிறது.
எனவே உலகில் பெரும்பாலானவர்கள் நேர் மறை எண்ணங்களையே எண்ணி வந்தால் இவ்வுலகம் மகிழ்ச்சி பூங்காவாகி விடும்.
2 comments:
\\அதற்குப் பதிலாக எப்போதும் நேர் மறை எண்ணங்களான அனைவருக்கும் நல்லதை நினைத்தல், தன்னம்பிக்கை, துணிவு, மகிழ்ச்சி, அமைதி, சுறுசுறுப்பு என்பனவற்றை கொண்டிருந்தால்
நம்மை சுற்றி நல்ல மனிதர்களும், சூழ் நிலைகளும் அமைவதை காணலாம். \\
காசு, பணம் செலவில்லாத அருமையான வழிமுறை
பின்பற்றி நலம் காண்போம்
வாழ்த்துக்கள் நண்பரே
your posts are really simply superb..keep going..
Post a Comment