Aug 28, 2009

நமது இன்றைய நிலைக்கு முந்தைய எண்ணங்களே காரணம்!


நாம் இன்று இருக்கும் நிலைக்கு நாம் இது வரை எண்ணிய எண்ணங்களே காரணம் என்றால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?

ஏற்றுக் கொள்ள தான் வேண்டியுள்ளது.

நமது இன்றைய நிலை எப்படி பட்டதாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இந்த நிலைக்கு, இந்த இடத்திற்கு நம்மை கொண்டு வந்து சேர்த்தது நாம் இது வரை எண்ணிய எண்ணங்களின் ஒட்டு மொத்த விளைவு தான்.

இதுவரை நாம் எண்ணிய எண்ணங்களின் ஒட்டு மொத்த கலவை தான் நமது தற்போதைய சுபாவம், உலகில் நாம் உள்ள நிலைக்கு முக்கிய காரணமாகின்றன.

இந்த இடத்தில் சமுதாய எண்ணங்கள், அதாவது நம்மை சுற்றியுள்ளவர்களின் எண்ணங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஆம்! நம்மை சுற்றியுள்ளவர்களின் எண்ணங்களும் நம்மை பாதிக்க தான் செய்கின்றன.

அவை நல்ல எண்ணமாகவும் இருக்கலாம் அல்லது தீயதாகவும் இருக்கலாம்.

தீய எண்ணங்கள் முதலில் எண்ணுபவருக்கு தீமை விளைவித்தாலும், அவற்றிலுருந்து நம்மை பாது காத்து கொள்வதும் அவசியமாகிறது.

அதற்கு விழிப்புணர்வு தேவை.

எந்த சூழ்நிலையிலும் மதி (அறிவு) மயங்காத விழிப்புணர்வு அவசியமாகிறது.

விழிப்புணர்வு மற்றவர்களின் எண்ணங்களிலிருந்து நம்மை பாது காப்பதோடன்றி நல்ல எண்ணங்களை, நமது குறிக்கோளுக்கு ஒத்த எண்ணங்களை எண்ண துணை புரிகின்றது.

அவ்வெண்ணங்கள் நம்மை நல்லவற்றை செய்யவும், நமது குறிக் கோளை அடையவும் வழி கோலுகின்றன.

ஆக நமது வருங்காலத்தை நமது தற்போதைய எண்ணங்களின் மூலம் நிர்ணயம் செய்வோம்! விழிப்புணர்வுடன் வாழ்வோம்!

3 comments:

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் இது அடிக்கடி நான் உணர்ந்து உள்ளேன்.நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கிறது.

சிங்கக்குட்டி said...

என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.

http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_31.html

என்றும் அன்புடன் - சிங்கக்குட்டி

டவுசர் பாண்டி said...

//இந்த இடத்திற்கு நம்மை கொண்டு வந்து சேர்த்தது நாம் இது வரை எண்ணிய எண்ணங்களின் ஒட்டு மொத்த விளைவு தான்.//

ரொம்பவே ரசிச்சேன் தலீவா !! உங்க கருத்துக்கள் ரொம்ப ஆழமா !! அதே சமயம் , சிந்திக்க வைப்பதா இருக்கு . சூப்பர் !!

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...