Aug 18, 2009

எண்ணஙகளின் ஆற்றல்!


எண்ண ஆற்றல்களைப் பற்றி அனைவரும் அறிவோம்.

எண்ணங்கள் எவவளவு சக்தி படைத்தன, எண்ணஙகள் நமது வாழக்கையை கட்டுப்படுத்துவன என ஞானிகள் மற்றும் அறிஞர்கள் சொல்வதை கேட்டிருக்கிறோம்.

ஆகவே நாம் எண்ணங்களை கண்காணிக்க பழக வேண்டும்.

நாம் நமது எண்ணங்களை தொடர்ந்து ஆராய்ந்து வந்தால் விரைவில் நாமும் அறிஞர்களாக திகழலாம் என்றார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

கவலை, பயம், பொறாமை, சினம் முதலிய தீய எண்ணங்களை கவனித்து ஒதுக்க வேண்டும்.

பழக்கத்தில் வரும் இந்த எண்ணஙகளை விழிப்புணர்வுடன் கண்டு கொண்டு அதற்கு பதிலாக நல்ல எண்ணங்களை எண்ணி வர வேண்டும்.

இதனை ஒரு பயிற்சியாக செய்து வரலாம்.

தீய எண்ணஙகள் நமக்கும் நமது சூழ் நிலைக்கும் தீமை பயக்கும் என்பதை உணர வேண்டும்.

அடுத்தவருக்கு நாம் நன்மை நினைப்பது நமக்கும் நன்மை தரும் என்பதை அறிய வேண்டும்.

எண்ணங்கள் மிகுந்த ஆற்றல் வாய்ந்தவை என்பதையும் அவை அவற்றுக்கு ஒப்பான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் ஈர்க்க வல்லன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நமக்கும் மற்றவர்களூக்கும் நல்லதையே நினைப்போம். நல்லவற்றையே பெறுவோம்!!

2 comments:

க. தங்கமணி பிரபு said...

நண்ப,
வணக்கம். நல்ல அல்லது ideal சிந்தனைகள் என்பதற்கு வாழ்நிலையும், சுற்றுப்புற தட்வெட்பசூழ்நிலையும் ஒவ்வாமல் இருக்கும் இக்காலகட்டத்தில் நீங்கள் செய்வது ப்ளாக் எழுதுவது என்பதற்கும் மேலான செயல் அல்லது சேவை! இப்படி சிந்தித்தற்கே உங்களை எவவள்வு பாராட்டினாலும் தகும்! ப்ளாக்கிலும் பொதுநலம் பயிலலாம் என்பதனை உணர்த்திய உமக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

முக்கோணம் said...

அன்பு நண்பர் தங்கமணி பிரபு அவர்களே, தங்களது பாராட்டு மேலும் இது போன்ற கருத்துக்களை பகிரக் கூடிய உத்வேகத்தை தருகிறது. இந்த நற்கருத்துக்கள் யாவும் ஞானிகள் மற்றும் அறிஞர்கள் வாயிலாக நாம் அனைவரும் அறிந்தவை தான். அவற்றை பகிர உற்சாகப்படுத்தும் தங்களைப் போன்ற நல்ல நண்பர்களுக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும்.

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...