Aug 9, 2009

ஏன் நல்லவற்றையே நினைக்க வேண்டும்?


நாம் எல்லோரும் நினைவு தெரிந்த நாள் முதல் நல்லவற்றையே நினை, நல்லவற்றையே செய் என்ற அறிவுரைகளை கேட்டு வ்ருகிறோம்.

வழக்கமாக ஏதாவது ஆதாயம் இருப்பின் மட்டுமே மனித மனம் எதையும் செய்ய விழையும்.
ஆகவே நலலதை நினைப்பதால் என்ன நன்மை என்பதனை நமது நண்பர்களுடன் பகிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

எண்ணம் என்பது வெறும் வெற்று சமாச்சாரம் அல்ல. எண்ணங்கள் ஆற்றல் வாய்ந்தவை. நாம் எண்ணும் எண்ணங்கள் நம்மை எண்ணத்திற்கு ஒத்த செயல் புரிய தூண்டுவது மட்டுமின்றி நம்மிடத்தில் ஒரு பதிவை ஏற்படுத்துகிறது. மேலும் அது வெளியே சென்று நமது எண்ணத்திற்கு ஒப்பான சூழ்நிலைகளையும் மனிதர்களையும் ஈர்க்கிறது.

எண்ணம் இரு முனை கத்தி போன்றது. ஒருவர் மற்றவருக்கு எண்ணும் கெடுதல் எண்ணம் முதலில் அவரிடத்தில் பதிவை ஏற்படுத்தி விட்டு வெளியே செல்கிறது. அந்த பதிவு எண்ணுபவருக்கு துன்பமாக விளைகிறது.

ஆகவே எப்போதும் நல்ல எண்ணங்களையே தொடர்ந்து எண்ணி வருவது நல்லது.

நல்ல எண்ணங்களை ஒரு பயிற்சி போல் பழகி எண்ணி வர வேண்டும். தீய எண்ணங்கள் ஏற்படும் போது விழிப்புணர்வுடன் உடனே அதனை களைந்து நல்ல எண்ணத்தை விதைக்க வேண்டும்.

விழிப்புணர்வுடன் வாழ்ந்தால் நமக்கு ஏற்படும் தீய எண்ணங்களை எளிதாக தவிர்ப்பதோடன்றி மற்றவர்களின் தீய எண்ணங்கள், செயல்களிலிருந்தும் நம்மை காத்துக் கொள்ள முடியும்.

தொடர்ந்து எண்ணும் நல்ல எண்ணங்கள் நம்மை சுற்றி நல்ல அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன். நாம் இருக்கும் சூழலுக்கும் நன்மை விளைவிப்பதாக உள்ளது. நாம் இருக்கும் சமுதாயத்திற்கும் நன்மை விளைவிக்கும்.

ஞானிகள் கூறிய வழியில் இவ்வுலகில் உள்ள யாவரும் நல்லறிவை உபயோகித்து வாழ்ந்து, யாருக்கும் தீங்கு எண்ணாமல் எப்போதும் நல்லதையே எண்ணி வந்தால் இப்பூமி மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும் சந்தோஷ பூங்காவாக மாறி விடும்!

6 comments:

தமிழ் காதலன் said...

//எண்ணம் என்பது வெறும் வெற்று சமாச்சாரம் அல்ல. எண்ணங்கள் ஆற்றல் வாய்ந்தவை. நாம் எண்ணும் எண்ணங்கள் நம்மை எண்ணத்திற்கு ஒத்த செயல் புரிய தூண்டுவது மட்டுமின்றி நம்மிடத்தில் ஒரு பதிவை ஏற்படுத்துகிறது. மேலும் அது வெளியே சென்று நமது எண்ணத்திற்கு ஒப்பான சூழ்நிலைகளையும் மனிதர்களையும் ஈர்க்கிறது.
//

nicelines

தமிழ் காதலன் said...

//விழிப்புணர்வுடன் வாழ்ந்தால் நமக்கு ஏற்படும் தீய எண்ணங்களை எளிதாக தவிர்ப்பதோடன்றி மற்றவர்களின் தீய எண்ணங்கள், செயல்களிலிருந்தும் நம்மை காத்துக் கொள்ள முடியும்.//
very nice

முக்கோணம் said...

கருத்துக்கு மிக்க நன்றி 'தமிழ் காதலன்'!

Vishnu - விஷ்ணு said...

நல்ல பதிவு..

avinashi kidsworld said...

Very Good Motivation sir

avinashi kidsworld said...

Very Good Motivation sir

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...