வேலையை ஒத்தி போடுவது மனிதன் தோன்றிய காலத்திலிருந்து தொன்று தொட்டு கடை பிடித்து வந்த பழக்கமாக இருக்க வேண்டும்.
எதையும் கடைசி நாளில், கடைசி நிமிடத்தில் செய்வதை பரம்பரை பரம்பரையாக பின் பற்றி வருகிறோம்.
அதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் அந்த செயலை செய்ய பிடிக்காததே என அறிந்து கொள்ளலாம். ஆகவே மனம் அந்த செயலை செய்ய பிடிக்காமல் அப்போதைக்கு தப்பிக்க ஒத்திப் போட முயல்கிறது.
கடைசி நேரத்தில் பயம் வந்து அடித்து பிடித்து செய்து விடுகிறோம்.
அவ்வாறு செய்கையில் தவறு நேர்ந்தாலும் தெரியாது.
செய்ய வேண்டிய வேலையை திட்டமிட்டு முன்னரே முடிக்கும் போது ஏற்படும் திருப்தியும், மகிழ்ச்சியும் நம்மை பதட்டமில்லாமல் அமைதியாக வாழ வழி வகுக்கிறது.
வேலையை ஒத்திப் போடுவதை தவிர்க்க ஏதாவது வழி இருக்கிறதா என தேடியதில் சில வழி முறைகள் கவர்ந்தன, நன்கு பயன் தருவதாகவும் அமைந்தன.
முதல் வழி:
நம் மனம் ஏதாவது வேலையை ஒத்திப் போட முனைந்தால், எப்பாடு பட்டாவது அந்த வேலையில் முதல் அடியை எடுத்து வைத்து விட வேண்டும். விஷயம் என்னவென்றால், எதிலும் முதல் அடியை எடுத்து வைப்பது தான் கடினம். முதல் அடியை எடுத்து வைத்து உள் நுழைந்து விட்டால் அப்புறம் சுலபமாகி விடும். அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளிக்கும் போது முதல் குவளை நீரில் நனைவது மட்டும் தான் கடினம். நனைந்து விட்டால் அப்புறம் எளிதே. இதற்கு கொஞ்சம் மன உறுதி மட்டும் அவசியம்.
இரண்டாவது வழி:
மனப் பட வழி முறை. – இதுவும் சிறந்த வழிமுறை தான். இதனை பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் விவாதித்துள்ளோம். அதனுடைய சுட்டி இதோ:
நண்பர்கள் தங்கள் கருத்துக்களையும், வேறு வழிகளையும் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்.
4 comments:
friend,nice advice keep it up.
தேவையானதொரு விடயத்தைப்பற்றி ஆராய முனைந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
மேலதிக தகவல்களையும் பதிவிடுங்கள்
இன்னும் கொஞ்சம் செய்திகளை சேர்த்துக் கொடுங்கள்.,
சட்டென இடுகை முடிந்துவிட்ட மாதிரி உணர்வு:))
கருத்துக்கு மிக்க நன்றி 'தமிழ் காதலன்', வலசு-வேலணை மற்றும் நிகழ் காலத்தில்..!
Post a Comment