May 28, 2009

புகை பிடித்தல்: விடுவது எப்படி? - புத்தம் புதிய வழி!!



ஒருவர்: ஏன்யா, அதான் ’புகை பிடிக்காதீர்’ ன்னு போர்டு வச்சிருக்கே..இங்க உக்காந்து புகை பிடிக்கறே?

மற்றவர்: நான் எங்கேங்க புகை பிடிக்கிறேன்..? விட்டுட்டு தானே இருக்கேன்..

* * * * * * * *

ஒருவர்: ஏன் சார், நீஙக சிகரெட் பிடிக்கறதானல தானே உடம்புக்கு இவ்வளவு பிரச்சனை. பேசாம சிகரெட்டை விட்டுற வேண்டியது தான..?

மற்றவர்: விட்டா சிகரெட் கீழே விழுந்துடுங்க..

என்பது போன்ற நகைச்சுவை துணுக்குகளை நாம் ரசித்து படித்தாலும், புகை பிடிப்பதன் தீமையை நன்கு அறிவோம்.

விளையாட்டாகவும், நண்பர்களின் தூண்டுதலிலும் புகை பிடிக்க ஆரம்பித்து, விட முடியாமல் தவித்துக் கொண்டிருப்போரையும் அறிவோம்.

மனம் பழக்கத்திற்கு அடிமை.

சிகரெட் பிடிக்க ஆரம்பிக்கும் போது முதலில் அதில் எந்த வித மகிழ்ச்சியும் இருப்பதில்லை. தொடர்ந்து செய்யும் போது அது ஒரு பழக்கமாக மாறி ஒட்டிக் கொண்டு விடுகிறது.

இந்த பழக்கத்தை நிறுத்தவது எப்படி?

அதற்கு முதலில் அதன் அடிப்படையை தெரிந்து கொள்வோம்.

ஒவவொரு முறை புகை பிடிக்கும் போது அந்த செயல் அவர்களின் மூளையில் ஒரு பதிவை ஏற்படுத்துகிறது.

அந்த பதிவுகள் மெல்ல ஒரு ஆற்றலாக உருவாகி சேமித்து வைத்துக் கொள்ளப் படுகிறது.

முன்பு ‘சுய முன்னேற்ற நூல்களால் சுய முன்னேற்றம் ஏற்படுமா?’ என்ற பதிவில், சூழ்நிலை எவ்வாறு எண்ணங்களை தூண்டுகிறது என்பதை ஒரு வெளிநாட்டு விஞ்ஞானி நாயை வைத்து செய்த ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்ததை பற்றி, படித்தது நினைவிருக்கலாம்.

படிக்காதவர்கள் இந்த இணைப்பை சொடுக்கி தெரிந்து கொள்ளலாம்:


அதே போல் பொருத்தமான சூழ்நிலை ஏற்படும் போது, எடுத்துக்காட்டாக தேனீர் அருந்திய பின்போ, உணவு உண்ட பின்போ அல்லது நண்பர்களுடன் சேரும் போதோ அந்த சேமித்து வைக்கப் பட்ட எண்ண ஆற்றல் புகை பிடிக்க தூண்டுகிறது.

அந்த ஆற்றல் மன வலிமையை விட சக்தி வாய்ந்ததாக உள்ளதால், என்ன தான் அது தீமை என்று நமது மனதின் ஒரு பகுதி சொன்னாலும், அது ஜெயித்து விடுகிறது.

ஆகவே தான் புது வருட சபதம் எடுப்பவர்களால் சிறிது நாள் புகை பிடிக்காமல் தாக்குப் பிடிக்க முடிகிறது. அதற்கு அர்த்தம் அவர்களது மன சங்கல்பத்தின் சக்தி ஓரளவு உள்ளதால் சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற தூண்டுதலை முறியடிக்க முடிகிறது.

ஆனால் விரைவில் அவர்கள் தங்கள் மன வலிமையை, சங்கல்பத்தின் சக்தியை இழந்து விடுகிறார்கள். அதன் சக்தி மங்கி விடுகிறது.

நீண்ட காலமாக அவர்கள் புகை பிடித்து சேமித்து வைத்த ஆற்றல் அவர்களது மன வலிமையை தோற்கடித்து விடுகிறது.

ஆக இந்த பழக்கததை விட்டி விட செய்ய வேண்டியது மிகவும் எளிது – உருவான அந்த ஆற்றலை சமப்படுத்த வேண்டும்!

அதற்கும் எளிய வழியுண்டு.


அதனை பின்வரும் இணைப்பை க்ளிக்கி படிக்கலாம்:



கீழே உள்ள தமிழிஷ் இணைப்பில் ஓட்டுப் பொத்தானை அழுத்தியும், ‘இந்த பதிவை நண்பருக்கு தெரிவியுங்கள்’ இணைப்பின் மூலம் மின்னஞ்சல் செய்தும் புகையில்லா சமுதாயத்தை உருவாக்க நாமும் கண்டிப்பாக பங்காற்ற முடியும்.

நன்றி.

6 comments:

Anonymous said...

porunga oru tham pottittu vanthu vottu podurathaa vendaamaannu mudivu pannuraen :)

சூர்யா ௧ண்ணன் said...

இப்பொழுது புதிதாக மருந்து கடைகளில் NewLife Chewettes for Smokers என்ற சூயிங்கம கிடைக்கிறது. எப்பொழுதெல்லாம் புகைக்க தோன்றுகிறதோ, அப்பொழுதெல்லாம் இதை சாப்பிடலாம். இதிலும் நிகோடின் உள்ளது ஆனால் இது உடலுக்கு தீங்குசெய்யாது.

வால்பையன் said...

ஒரு நாளைக்கு ரெண்டு சிகரெட் பிடிச்சா கூட தப்பா?

அப்புறம் சிகரெட் கம்பெனிகாரங்க எப்படி வாழ்றது?

வெற்றி said...

இது சரியில்லீங்றேன். ஆசையாப் படிக்க வந்தா, இப்படி ஒன்னும் சொல்லாம விட்டாக்கா எப்படிங்றேன்.

கோவம் கோவமா வருதுங்றேன்.

Anonymous said...

very excellent post pls continue

வா(வ)ரம் said...

தமிழர்களின் ‘வாரம்’

”புது இணைய இதழ் “

இது ஒரு திரட்டி அல்ல.

தங்கள் படைப்புகளை இங்கு இணத்து நண்பர்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

http://tamilervaram.blogspot.com/

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...