May 8, 2009

தியானத்தால் ஏற்படும் நன்மைகள்:

1) அறிவுக் கூர்மை ஏற்படும்.

2) மன உறுதி உண்டாகும்.

3) மனம் ஆனந்த அமைதியில் திளைக்கும்.

4) பிரச்சனைகளை எளிதாக தீர்க்க கூடிய மன வலிமை ஏற்படும்.

5) ஞாபக சக்தி அதிகரிக்கும்.

6) நம்மை சுற்றி நல்ல அதிர்வு அலை ஏற்படும்.

7) நல்ல நண்பர்களும், நல்ல சூழ்நிலைகளும் சூழும்.

8) முகம் பிரகாசமடையும்.

9) மனதிற்கு எஜமானனாகலாம். நாம் சொல்வதை மனம் கேட்கும்.

10) பழக்கத்திலிருந்து விடு படக் கூடிய மன சக்தி கிட்டும்.

11) மனம் அமைதி அடைவதால் பரபரப்பு குறைந்து உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கும்.

12) தேவையற்ற கோபம் போகும்.

13) மாணவர்களுக்கு படிப்பில் விருப்பம் ஏற்படும். நல்ல பழக்கங்கள் உண்டாகும்.

14) மன ஒருமைப்பாடு உண்டாகும்.

15) மனம் கட்டுப் பாட்டில் இருப்பதால் தேவையற்ற எண்ணங்கள் குறையும்.

ஆதலினால் தியானிப்பீர்...!

8 comments:

Vishnu - விஷ்ணு said...

முக்கோணமுன்னு பெயர் வச்சுகிட்டு பல கோணங்களில் திங் பண்ணுறீங்க.

தியானத்தின் நன்மைகளை சொல்லிட்டீங்க. தியானம் பற்றிய பதிவுகள் எப்ப வரும்.

Vishnu - விஷ்ணு said...

// மாணவர்களுக்கு படிப்பில் விருப்பம் ஏற்படும்//

முன்னாடியே தியானத்தோட அருமைகள் தெரிந்து இருந்தால்.. கணக்கு வாத்தியார்கிட்டயாவது பாரட்டு வாங்காம இருந்திருப்பேன்

இது நம்ம ஆளு said...

நல்ல பதிவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

முக்கோணம் said...

விஷ்ணு....ஸ்கூல்ல நிறைய "பாராட்டு" வாங்கியிருக்கீங்கன்னு தெரியுது..

முக்கோணம் said...

வாங்க நம்ம ஆளு..வாழ்த்துக்கள்!

Tech Shankar said...

ரொம்ப நன்றிங்க

Suresh said...

மிக மிக நல்ல பதிவு

வடுவூர் குமார் said...

என்னென்ன நடக்கும்? - இதில் பல நான் உணர்ந்திருக்கேன்.

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...