May 6, 2009

பிரச்சனைகளுக்கு எளிதாக முடிவு காண்பது எப்படி?

முந்தையபதிவில் முடிவெடுக்கும் கலையை பற்றிகொஞ்சம் விவாதித்தோம்.

அதனுடையசுட்டி:

http://mukkonam.blogspot.com/2009/05/blog-post_04.html

இன்றைக்கு முடிவு எடுக்க இயலா தன்மையை போக்குவதற்கான வழி முறையை பார்ப்போம்.

முடிவெடுப்பதை தவிர்ப்பதற்கும், , ,- முடிவு எடுப்பதை ஒத்தி போடுவதற்கும் முக்கியமான காரணம் - அந்த முடிவை செயல்படுத்தும் போது ஏற்படுவதாக நம்பும் விளைவுகளை கண்டு பயந்து தான்.

ஆகவே முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால் ஏதாவது ஒரு பழைய நோட்டிலிருந்து ஒரு முழு பக்க வெள்ளைத்தாளை கிழிக்க வேண்டும்.

அடுத்து நம் முன்னே உள்ள பிரச்சனையை எழுத வேண்டும்.

அடுத்து அதனை தீர்க்க சாத்தியக் கூறான முடிவுகளை எழுத வேண்டும்.

நமது அனுபவத்தை வைத்து அந்த முடிவுகளை சீர் தூக்கி பார்த்து சரியான ஒரு முடிவை தேர்வு செய்ய வேண்டும்.

அந்த முடிவை செயல்படுத்த தயங்குவதற்கான (பயப்படும்) காரணங்களை எழுத வேண்டும்.

அந்த பயங்களை போக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுத வேண்டும்.

அதனை செயல்படுத்த வேண்டும்.

இப்போது பார்த்தீர்களென்றால் முடிவெடுப்பது மிக சுலபமாக இருக்கும்.

இந்த வழிமுறை உஙகளூக்கு பிடித்து உள்ளதா???..

பிடித்திருந்தால் கீழே தமிலிஷில் ஓட்டு போடவும்.

சந்தேகங்களையும், - உஙகளுக்கு தெரிந்த வழிமுறைகளையும் பின்னூட்டத்தில் எழுதவும்.

2 comments:

Vishnu - விஷ்ணு said...

இன்னைக்கே செயல்முறை படுத்தி பார்க்கிறேன்.

//நமது அனுபவத்தை வைத்து அந்த முடிவுகளை சீர் தூக்கி பார்த்து சரியான ஒரு முடிவை தேர்வு செய்ய வேண்டும்//

ஆனா நம்ம முடிவுகள் எப்பொழுது நம்முடைய முந்தைய மனநிலை ஒட்டிய முடிவுகளாக தானே இருக்கும்.

முக்கோணம் said...

சரியாக சொன்னீர்கள் விஷ்ணு! கண்டிப்பாக நமது முடிவை ஆராயமல் எடுத்தால் அது முந்தைய மன நிலையை பிரதி பலிப்பதாக தான் இருக்கும். அதை தவிர்க்கவும் வழியுண்டு. சாத்தியமான ஒவ்வொரு தீர்வையும் எழுதி அதன் நன்மைகளையும் தீமைகளையும் பட்டியலிட்டு மதிப்பெண் இட வேண்டும். அதிக மதிப் பெண் பெறும் முடிவை தேர்வு செய்யலாம். பொதுவாக நாம் மனதில் எண்ணி முடிவெடுப்பதை விட எழுதிப் பார்த்து முடிவு செய்தல் நமது தவறுகளை தவிர்த்து தெளிவான தீர்வை கண்டு கொள்ள உதவும் என்பது ஐதீகம்.

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...