நமது தினசரி வாழ்க்கையில் ஏராளமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.
ஆனால் முடிவு எடுக்கும் கலையில் நன்கு தேறியவர்கள் ஒரு சிலரே.
பெரும்பாலோனோர் எந்த விஷயத்திலும் உடனடியாக ஒரு முடிவுக்கு வர முடியாமல் தடுமாறுகின்றனர்.
அதற்கு மிக சிறந்த உதாரணம் ஒரு சில மகளிர் புடவை கடைக்கு சென்று நாள் கணக்கில் தங்கி, புடவையை தேர்வு செய்ய முடியாமல் பிறகு வேறு கடைக்கு செல்வதை கூறலாம்.
இன்னும் சிலர் முடிவு எடுக்க பயந்து அடுத்தவரை நம்பி இருப்பர். அடுத்தவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது தான். அதற்காக ஒவ்வொரு விஷயத்திலும் அடுத்தவரையே சார்ந்து பிழைப்பு நடத்துவது நமது தன்னம்பிக்கையை குறைத்து விடும். மேலும் அடுத்தவர்களின் சாவிக்கு இயங்கும் பொம்மையை போல் மாறி விடுவோம். சுற்றியுள்ளவர்கள் நம்மை ஆட்டுவிப்பவராக மாறி விடுவார்கள்.
அடுத்த வகையினர் தான் மிகவும் சுவாரசியமானவர்கள். அவர்கள் அடுத்தவர்களிடம் ஏதும் கேட்க மாட்டார்கள் அதே சமயம் தானும் முடிவெடுக்க மாட்டார்கள். முடிவு எடுக்க பயந்து முடிவெடுப்பதை ஒத்தி வைத்தவாறு இருப்பார்கள்.
தவறான முடிவெடுப்பதும் முடிவே எடுக்காமல் இருப்பதும் ஒன்று தான். இன்னும் சில நேரங்களில் தவறான முடிவெடுப்பதை விட முடிவே எடுக்காமல் இருப்பது இன்னும் தவறாக முடியும்.
சூழ்நிலை நம்மிடம் ஏதாவது ஒரு முடிவை எதிர் நோக்கியுள்ளது. அந்த நேரத்தில் முடிவெடுக்காமல் போவது நமது முன்னேற்றத்தை தடுத்து கீழே தள்ளும்.
மன உறுதியில்லாமல், முடிவெடுக்க பயந்து ஒத்தி போடும் பழக்கம் நாளைடைவில் நமக்குள் ஊறி ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கும்.
முடிவெடுப்பதை பற்றி பிரபல ஆங்கில எழுத்தாளர் பிரிஸ்டல் பின்வருமாறு கூறினார்:
“நீங்கள் முடிவு எடுக்கவும், பொறுப்பு ஏற்கவும் தயங்குகிறீர்களா????? ? ?.. பெரும்பாலான மக்கள் அப்படி தான். ஆகவே தான் மிக சில தலைவர்களும், தொண்டர்கள் நிறைய பேரும் உள்ளனர். நீங்கள் ஒரு பிரச்சனையை சந்திக்க நேர்ந்து ஒரு முடிவு எடுக்காமல் அப்படியே விட்டு விட்டால் அந்த பிரச்சனை பெரிதாகி அதனை தீர்ப்பதற்கான உங்கள் திறன் மீது உங்களுக்கு மேலும் பயம் ஏற்படும். ஆகவே வேகமாக முடுவெடுக்க பழகுங்கள். ஏனென்றால் முடிவெடுக்காமல் இருப்பதன் மூலம் நீங்கள் செயல் பட தவறுகிறீர்கள். செயல் பட தவறினால் தோல்வியை வரவேற்கிறீர்கள். ஒரு முடிவு எடுத்து விட்டீர்களென்றால் உடனே பிரச்சனைகள் காணாமல் போக ஆரம்பிப்பதை சீக்கிரமே உங்கள் அனுபவத்தில் கண்டு கொள்வீர்கள்...”
நாளைய பதிவில் முடிவெடுக்க முடியாத தன்மையை போக்க என்ன செய்ய வேண்டும் என்ற எளிய பயனுள்ள செய்முறையை காண்போம்.
பின்குறிப்பு:
இந்த பதிவை மற்றவர்களும் படித்து பயன் பெற கீழே உள்ள தமிலிஷ் வாக்கு பட்டையில் VOTE பொத்தானை க்ளிக்கியும், ,-பதிவின் மேலே உள்ள தமிழ் மணத்தில் பரிந்துரை செய்தும் உதவுங்கள்.
கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை பின்னூட்டத்தில் எழுதவும். நன்றி.
1 comment:
//“நீங்கள் முடிவு எடுக்கவும், பொறுப்பு ஏற்கவும் தயங்குகிறீர்களா????? ? ?.. பெரும்பாலான மக்கள் அப்படி தான். ஆகவே தான் மிக சில தலைவர்களும், தொண்டர்கள் நிறைய பேரும் உள்ளனர். நீங்கள் ஒரு பிரச்சனையை சந்திக்க நேர்ந்து ஒரு முடிவு எடுக்காமல் அப்படியே விட்டு விட்டால் அந்த பிரச்சனை பெரிதாகி அதனை தீர்ப்பதற்கான உங்கள் திறன் மீது உங்களுக்கு மேலும் பயம் ஏற்படும். ஆகவே வேகமாக முடுவெடுக்க பழகுங்கள். ஏனென்றால் முடிவெடுக்காமல் இருப்பதன் மூலம் நீங்கள் செயல் பட தவறுகிறீர்கள். செயல் பட தவறினால் தோல்வியை வரவேற்கிறீர்கள். ஒரு முடிவு எடுத்து விட்டீர்களென்றால் உடனே பிரச்சனைகள் காணாமல் போக ஆரம்பிப்பதை சீக்கிரமே உங்கள் அனுபவத்தில் கண்டு கொள்வீர்கள்...”//
குட் மெசேஜ்! அனுபவப் பூர்வமான உண்மை!
Post a Comment