Jan 25, 2009

கி.பி. 2039 ல் ஒரு கிரிக்கெட் போட்டி.

கி.பி. 2039.

ஈடன் கார்டன் மைதானம்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம்.

ஆரம்பத்தில் 5 நாள் டெஸ்ட் போட்டியாக ஆரம்பித்த கிரிக்கெட் ஒரு நாளாக மாறி 20-20 ஓவர் போட்டிகளாக சுருங்கியது.

2012 ல் மக்களுக்கு அதுவும் போர் அடிக்க துவங்க அதனை 10-10 ஆக குறைத்தார்கள்.

பத்து ஓவர் மேட்சையும் விரைவில் 'ரொம்ப ஓவர்..' என நினைத்து 5-5 ஆக 2020ல் மாற்றினார்கள்.

நல்ல வேளையாக அடுத்த பத்து வருடங்களுக்கு அதை ஒன்றும் செய்யாதது கிரிக்கெட்டின் பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும்.

2030ல் மெதுவாக " 5-5 மேட்சை பார்ப்பதற்கு ரொம்ப மண்டை காயுது..எவனால ஆகும்...ஒரு ஓவர் மேட்சாக சுருக்கினால் மேட்ச் சூடு பிடிக்கும்.." என்று எவனோ ஒரு புண்ணியவான் ஆரம்பித்தான்.

விரைவிலேயே ஒரு ஓவரும் வந்தது. 6 பவுலர்கள் வந்து ஆளுக்கு ஒரு பந்தை வீசினார்கள்.

பதினைந்து நிமிடத்தில் மொத்த மேட்சும் முடிந்தது.

எல்லாம் நன்றாக தான் போய்க் கொண்டிருந்தது.

ஆனால் கொஞ்ச நாளிலேயே வழக்கம் போல் ஒரு ஓவரையும் இன்னும் குறைக்க முடியுமா என சில அறிவு ஜீவிகளின் குழு உட்கார்ந்து யோசித்தது.

இந்த சமயத்தில் தான் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியானது.

' மிக விரைவாக இயங்கி கொண்டிருக்கும் நம் உலகில் மெதுவாக கிரிக்கெட் அதன் அந்தஸ்தை இழந்து வருகிறது. மிக நீண்ட இரண்டு ஓவர்களை பார்ப்பது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே கிரிக்கெட்டின் சுவாரசியத்தை கூட்ட இந்த 2039 ஆண்டு உலகக்க் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரு சிறந்த மாற்றத்தை செய்துள்ளோம். அது போட்டியை விறுவிறுப்பாக்கி கிரிக்கெட்டின் பக்கம் ரசிகர்களை ஈர்க்கும் என்று சொன்னால் மிகையாகாது.'

முதல் போட்டி இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும்.

மைதானத்தில் 'என்ன மாற்றம் செய்திருப்பார்கள்?' என்ற ஆர்வத்தோடு ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

போட்டி ஆரம்பிக்க தயாரனது.

இந்திய கேப்டனும் ஆஸ்திரேலிய கேப்டனும் மேட்ச் ரெஃப்ரியுடன் மைதானத்துக்குள் நுழைந்தனர்.

இந்திய, ஆஸ்திரேலிய ரசிகர்கள் கொடிகளை அசைத்து ஆரவாரம் செய்தனர்.

இந்திய கேப்டன் நாணயத்தை எடுத்து டாஸ் போட தயாரானார்.

ரசிகர்கள் கரகோஷம் செய்தனர்.

ஆஸ்திரேலிய கேப்டன் ' Tail..' என்று கேட்க, விழுந்தது தலை.

இந்திய கேப்டன் புன்னகைத்தார்.

ரெஃரி இந்திய கேப்டனுக்கு கை கொடுத்தார். " Congrates..."

மைதான டி.வி. திரையில் " இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டது'" என்று அறிவிக்கப் பட்டது.

இந்திய வீரர்கள் சந்தோஷத்தில் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து கும்மாளமிட்டனர்.

இந்திய ரசிகர்கள் ஆச்சரிய வெற்றிக் களிப்பில் கோஷமிட்டவாறு கலைந்து செல்ல துவங்கினர்.

'அடுத்த மேட்சிலேயும் இதே மாதிரி சூப்பரா காசை சுண்டி ஜெயிச்சுரணும்' என்று இந்திய கேப்டன் நினைத்துக் கொண்டார்.

போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ஒரு வயதான கிரிக்கெட் ரசிகர் தலையில் அடித்துக் கொண்டார்.

"எவ்வளவு கவுரவமா இருந்த கிரிக்கெட்..! இப்படி சுண்டாமுத்து ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டானுக...ரொம்ப ஓவரா தான் போறானுக.."

உங்கள் நண்பருக்கு இந்த பதிவை அனுப்ப இங்கே தொடவும்

5 comments:

LOSHAN said...

ரொம்ப ஓவர்.. கொஞ்சம் அதிகமா இல்ல?

Naren said...

ரூம் போட்டு யோசிப்பாங்களோ???

dinesh said...

ithu romba romba romba over over o over

tamilclassicnet said...

ஏனுங்கன்னா இப்படி...இதை யோசிச்சவருக்கு வில்லு படத்துக்கு ரிக்கற் எடுத்து தாறன் போய் பாருங்க...
(இதைவிட தண்டனை வேறு ஏதாவது இருக்கா!)

Anonymous said...

அட.. என்னமா யோசிக்கிறாய்ங்கப்பா... தாங்க முடியல சார்..

எப்படி இருந்த கிரிக்கட் இப்படியாயிட்டுதே!!! நல்ல தமாசு..

இனிய புன்னகையுடன்,
உதய தாரகை