Jul 27, 2009

சொற்களின் சக்தி


நாம் உச்சரிக்கும் சொற்களுக்கும் சக்தி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

நமது சொல்களுக்கேற்றவாறு நமது உணர்வில் மாற்றம் ஏற்படுகிறது.

திரும்ப திரும்ப உச்சரிக்கப்படும் வார்த்தைகள் நமது ஆழ்மனதிற்கு சென்று மனதிற்கு தெம்பும் தைரியமும் தருகின்றது.
வேண்டிய குறிக்கோளை நோக்கி நம்மை செலுத்துகிறது. வேகமாக குறிக்கோளை அடைய துணை புரிகிறது.

மேலும் நல்ல எண்ணத்துடன் உச்சரிக்கப்படும் சொற்கள் பிரபஞ்ச மனத்தை அடைந்து எப்போதும் நமக்கு நன்மையை புரிகின்றன.

உலக மக்களுக்கு நன்மை புரிய மனவளக்கலையை அருளிய அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் உரைத்த சங்கற்பங்களில் சில:

அருட்காப்பு:

”எல்லாம் வல்ல அருள் பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமைவதாக..”


சங்கற்பம்:

“எல்லாம் வல்ல அருட்பேராற்றல் கருணையால் உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வேன்”

“ ஆறு, ஏரி, குளம், கிணறு எல்லாம் நிரம்பி வழிய, மாரி அளவாய் பொழிய, மக்கள் வளமாய் வாழ..!
வாழ்க வையகம்..வாழ்க வளமுடன்..!”

“வாழ்க வையகம்..வாழ்க வளமுடன்..!”

10 comments:

நாமக்கல் சிபி said...

”எல்லாம் வல்ல அருள் பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமைவதாக..”

நாமக்கல் சிபி said...

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

நிகழ்காலத்தில்... said...

வாழ்க வளமுடன் முக்கோணம் அவர்களே.,

பணி தொடர மனமார வாழ்த்துகிறேன்

cheena (சீனா) said...

உண்மை உண்மை - நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லும் நம்மை மாற்றும் தன்மை உடையது

cheena (சீனா) said...

வாழ்க வளமுடன்

Anonymous said...

கிணறு??? WHERE IS IT? ARE YOU SEEN THIS NOW CONSTRUCTION HOUSE? AND HOW IT FILL IT

SO WE WANT கிணறு கிணறு கிணறு

நிகழ்காலத்தில்... said...

நண்பர் திரு.முக்கோணம் அவர்கள் எழுதியுள்ள சொற்களின் சக்தி இடுகையை படித்தவுடன் அதன் தொடர்ச்சியாக அதில் உள்ள நுட்பத்தை, வேதாத்திரி மகான் விளக்கிய வண்ணம் கொடுக்க விரும்பினேன். இதோ ஏன் அருட்காப்பு தேவை என்பதன் விளக்கம்.

முக்கோணம் said...

பதிவுகளை படித்து தங்கள் கருத்துக்களை வழங்கியதற்கு மிக்க நன்றி திரு. நாமக்கல் சிபி அவர்களே.
தங்களது கருத்துக்கள் எனக்கு இது போன்ற நல்ல விஷயங்களை மேலும் பகிர்ந்து கொள்ள ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது.

முக்கோணம் said...

ஊக்கத்துக்கு மிக்க நன்றி 'நிகழ்காலத்தில்..'! நல்ல விஷயங்களுக்கு எப்போதும் தாங்கள் அளிக்கும் உற்சாகமும் ஆதரவும் நற்கருத்துக்களை மேன்மேலும் பகிர எனக்கு உந்துதலை ஏற்படுத்தி வந்துள்ளது, வருகிறது என்பது உண்மை..!

முக்கோணம் said...

நன்றி திரு. சீனா அவர்களே..!

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...