ஆம் நம் மனம் தான் தியானத்திற்கு எதிரி. மனதின் இயல்பு எப்போதும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பது.
ஆனால் தியான நிலையோ மனமற்ற, எண்ணங்களை கடந்த நிலையில் ஏற்படுகிறது.
ஒருமுறை எண்ணங்களை கடப்பது எப்படி என்ற நுட்பம், balance கிடைத்து விட்டால் போதும் அப்புறம் மறப்பதில்லை.
தியானம் எளிதாகி விடும். அது மிதி வண்டி ஓட்டிப் பழகும் போது கிடைக்கும் balance ஐ போன்றது.
தியானம் செய்ய உட்கார்ந்து விட்டு ' என்ன எனக்கு இன்னும் தியானம் வரலை..? தியானம் எப்படி இருக்கும்' என்று தொடர்ந்து மனம் எண்ணிக் கொண்டிருந்தால் தியானம் ஏற்படுவதில்லை.
மேலும் தியானம் செய்ய உட்காரும் போதே 'நான் அடுத்த பத்து அல்லது இருபது நிமிடங்களுக்கு எதைப் பற்றியும் எண்ண மாட்டேன்' என்று மனதில் உறுதி எடுத்துக் கொள்வது நன்று.
தியானம் செய்ய அமர்ந்தவுடன் மனம் ஏகப் பட்ட எண்ணங்களை அவிழ்த்து விடும். அப்போது நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் 'நாம் தியானத்தில் இருக்கிறோம்' என்ற உணர்வுடன், அந்த எண்ணங்களுடன் கலந்து நம்மை மறந்து பின் செல்லாமல், அந்த எண்ணங்களை சற்று விலகி நின்று உற்று பார்க்க வேண்டும். இதற்கு தான் நமது விழிப்புணர்வு உதவுகிறது.
விழிப்புணர்வின் ஆற்றல் அதிகமாக உள்ளவர்களுக்கு எண்ணங்களை அவற்றுடன் ஒட்டாமல் விலகி நின்று பார்ப்பது எளிதாகிறது.
அப்படி பார்க்க, பார்க்க எண்ணங்கள் மெதுவாக தங்கள் வலுவை இழக்கின்றன.
எண்ணங்கள் மெதுவாக அடங்குகின்றன.
அப்படி எண்ணங்கள் அற்ற நிலையில் தான் தியானத் தன்மை உண்டாகிறது.
அனைத்து தியான முறைகளும் மனமற்ற நிலையை அடையும் வழிக்கான கருவிகளே.
மேலே சொல்லப் பட்டதும் அவற்றில் ஒரு முறை.
இன்னும் வரும் பதிவுகளில் எண்ணங்களை கடந்து செல்லும் நுட்பத்தை பற்றி விரிவாக விவாதிப்போம்.
6 comments:
// தியானம் செய்ய அமர்ந்தவுடன் மனம் ஏகப் பட்ட எண்ணங்களை அவிழ்த்து விடும். அப்போது நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் 'நாம் தியானத்தில் இருக்கிறோம்' என்ற உணர்வுடன், அந்த எண்ணங்களுடன் கலந்து நம்மை மறந்து பின் செல்லாமல், அந்த எண்ணங்களை சற்று விலகி நின்று உற்று பார்க்க வேண்டும். இதற்கு தான் நமது விழிப்புணர்வு உதவுகிறது. ///
ஆனால் சில தியான முறைகளில் எண்ண ஓட்டத்தை மறுக்காமல் பின் தொடர சொல்கிறார்களே.. அந்த ஓட்டத்தை பின் தொடர்ந்து சென்று முடிவில் ஒரு எண்ணமும் ஏற்படாமல் இருக்கும் என்று படித்த ஞாபகம்.
கருத்துக்கு நன்றி விஷ்ணு..!
எண்ணத்தை பின் தொடர்ந்து சென்றால் நம் மனம் நம்மை ஒரு எண்ணத்தில் இருந்து இன்னொரு எண்ணத்துக்கு அப்புறம் வேறொரு எண்ணத்துக்கு இட்டு செல்லும். நாம் தியானம் செய்ய உட்கார்ந்ததையே மறந்து விடுவோம். ஆனால் எண்ணத்துடன் கலக்காமல் ஒரு பார்வையாளனாக உருவாகும் எண்ணங்க்களை தொடர்ந்து பார்க்கும் போது விரைவில் எண்ண ஓட்டம் குறையும்.
//'நாம் தியானத்தில் இருக்கிறோம்' என்ற உணர்வுடன்,
அந்த எண்ணங்களுடன் கலந்து நம்மை மறந்து பின் செல்லாமல்,
அந்த எண்ணங்களை சற்று விலகி நின்று உற்று பார்க்க வேண்டும்.//
அருமை தியானம் பற்றி 3 வரிகளில் விளக்கம் கொடுத்துவிட்டீர்கள்..
இன்னம் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்!!
நல்ல பதிவு..
\\அந்த எண்ணங்களை சற்று விலகி நின்று உற்று பார்க்க வேண்டும். இதற்கு தான் நமது விழிப்புணர்வு உதவுகிறது.\\
அருமையாக எழுதுகிறீர்கள்., பாராட்டுக்கள்
மனதில் தோன்றுவதை சரியான முறையில் வெளிப்படுத்துகிறீர்கள்., வாழ்த்துக்கள்
பாராட்டுகளுக்குக நன்றி கலையரசன் மற்றும் நிகழ்காலத்தில்..
தியானத்திற்கு மிக அருமையான,எளிமையான பாமரனும் புரிந்துக்கொள்ளும்வண்ணம் விளக்கம் தந்தற்கு நன்றி.
Post a Comment