May 31, 2009

புகை பிடிப்பதை நிறுத்த வழி..!


"புகை பிடிப்பதை நிறுத்த புத்தம் புது வழி" என்ற சென்ற பதிவில் புகை பிடிக்கும் பழக்கம் எப்படி ஏற்படுகிறது, செயல் படுகிறது, ஏன் அதை அதை நிறுத்துவது கடினமாக உள்ளது என்பதை பற்றி எழுதியிருந்தேன்.

இந்த பதிவில் அதனை நிறுத்தும் வழியை பார்ப்போம்.

இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் என்பதனால் இந்த பதிவை இன்று எழுதுவது பொருத்தமாகவே இருக்கும்.

முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் சூர்யா கண்ணன் புதிதாக் வந்துள்ள NuLife Chewettes for Smokers என்ற சூயிங்கத்தை பற்றி எழுதியிருந்தார்.

முன்றைய பதிவில் சொல்லிய படி, தொடர்ந்து செய்யும் புகை பிடிக்கும் பழக்கம் நமது மூளையில், உடலில் ஒரு பதிவை ஏற்படுத்துகிறது.
அந்த பதிவு தொடர்ந்து புகைக்க புகைக்க ஆற்றல் வாய்ந்ததாய், தவிர்க்க முடியாததாய் மாறுகிறது.
தகுந்த சூழ்நிலையில் அந்த ஆற்றல் வேலை செய்து புகை பிடிக்கும் எண்ணத்தை தூண்டுகிறது.
புகை பிடித்து முடிக்கும் வரை அடங்குவதில்லை. பிடித்து முடித்த பின் அந்த தூண்டுதலின் ஆற்றல் தற்காலிகமாக நிறைவடைகிறது, நிறுத்தப்படுகிறது.

ஆக அந்த தூண்டுதலை, ஆற்றலை புகை பிடிக்காமலேயே சமன் செய்து விட்டால் சரிதானே?

அந்த சமன்பாட்டுக்கு தான் இது போன்ற சூயிங்கங்கள் உதவுகின்றன.

நான் எழுத நினைத்ததும், புகை பிடிக்கும் பழக்கத்திற்கு மாற்றாக ஏதாவது மிட்டாயை மெல்வதை பற்றி தான்.

அதே சமயத்தில் நமது நண்பர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். தகவலுக்கு நன்றி சூர்யா கண்ணன்.
இதை தான் எண்ணங்களின் ஒத்த நிகழ்வு என்று கூறுவார்கள். (இன்னொரு பதிவுக்கு தலைப்பு கிடைத்து விட்டது!)

இந்த சூயிங்கம், மிட்டாயை விட சிகரெட்டுக்கு மிக சரியான மாற்று தான்.
இதன் விலை 2ருபாய் 50பைசாவாம்.

புகை பிடிக்கும் பழக்கம் மூளையில் மட்டுமல்ல, உடலின் செல்களில் கூட பதிவை ஏற்படுத்துகிறது.
எனவே புகை பிடிக்கும் தூண்டுதல் ஏற்பட்டவுடன் உடலின் செல்கள் சிகரெட்டை உடனே கேட்கின்றன.
அப்போது உடனே கொஞ்சம் கூட தாமதிக்காமல் இந்த சூயிங்கத்தை எடுத்து வாயில் போட வேண்டும்.

ஏனென்றால் தாமதித்தால் நமது மனம் நம்மை ஏமாற்றும். பல்வேறு காரணங்களை சொல்லும்.
'இன்றைக்கு ஒரே ஒரு நாள் தம் அடிக்கலாம். நாளையிலிருந்து கட்டி வைத்து அடித்தாலும் புகைக்க மாட்டோம்' என்று கூட சொல்லும்.

ஆகவே தாமதிக்காமல் இந்த சூயிங்கத்தை எடுத்து வாயில் போட்டு மெல்ல வேண்டும்.

இதன் மூலம் ஒரளவுக்கு அந்த தூண்டுதல் சமப் படுத்த பட்டு விடும்.

இப்போது அந்த பழைய பதிவுகளை, தூண்டுதலை எதிர்பபது அவ்வளவு கடினமாக இருக்காது.

மேலும், புகை பிடிப்பதன் தீமைகளை தொடர்ந்து மனதில் எண்ணி பார்க்க வேண்டும்.
புகைப்பது உடலுக்கு, இதயத்துக்கு, நுரையீரலுக்கு, பிற உறுப்புகளுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எண்ணி பார்க்க வேண்டும்.

இதற்காக எப்போதும் சட்டைப் பையில் புகையிலையின் தீமைகளை விளக்கும் எழுத்துக்களையும், படங்களையும் வைத்திருப்பது சிறந்தது.
புகை பிடிக்கும் தூண்டுதல் செயல் பட ஆரம்பிக்கும் போது, அந்த குறிப்பை எடுத்து பார்க்க வேண்டும்.

அதன் தீமைகளை மனதில் எண்ணுவது தூண்டுதலை, பழைய ஆற்றலை எதிர்த்து சமப்படுத்தும்.

ஆரம்பத்தில் இது சிறிது சிரமமாக இருந்தாலும், தொடரும் போது பலன் தரும்.

அதிகமாக புகை பிடிப்போர் மருத்துவரின் ஆலோசனையை கேட்க தவற வேண்டாம்.

16 comments:

Anonymous said...

jbmb

Anonymous said...

i was a regular smoker(around 10 years)...almost 15 cigarettes per day.I started "oil pulling".Try google search for oil pulling.U can get various informations abt that.When i started started oil pulling for the other purposes ,i slowly found that my instinct for smoking is reducing...now im completely quit....and the sense of smoking is almost under my control.....i checked with other smokers who are doing "oil pulling" ...also got the same feed back.Next time please try to publish with more news abt "oil pulling" 's anti smoking nature.Thanks...

கலையரசன் said...

Gud Post keep it up||

Tech Shankar said...

வாங்க எங்க அருமை triangle உங்கள் பதிவின் தொடர்ச்சியாக மக்கள் கீழ்க்கண்ட படங்களையும் பார்த்து புண்ணியம் தேடிக்கட்டும்.

Smoke Kills - Part One


Smoke Kills - Part 1

Smoke Kills - Part 2

Smoke Kills - Part 3

கட்டபொம்மன் said...

அருமையான பதிவு, நானும் சிகரெட்ட விடனும் பாக்கறன் முடியல

வலைப்பூவிற்கு வந்திருந்து வாசித்து வாழ்த்தியமைக்கு நன்றி...
கட்டபொம்மன் http://kattapomman.blogspot.com

தீப்பெட்டி said...

நல்ல பாதிவா போட்டு கலக்குறிங்க பாஸ்..
இப்போ தேவையான பதிவு..

Vishnu - விஷ்ணு said...

சூப்பரு...அதே மாதிரி அந்த பெயரில்லாதவர் சொன்னதும் நல்ல டெக்னிக்.

முக்கோணம் said...

அருமையான பின்னூட்டங்கள் எழுதிய நண்பர்களுக்கும், ஓட்டு அளித்த நண்பர்களுக்கும் நன்றிகள் பல..

Oil pulling பற்றிய தகவலை தந்த அனானிக்கும், வாழ்த்திய திரு. கலையரசனுக்கும், அருமையான இணைப்புகளை தந்து உதவிய தமிழ் நெஞ்சத்திற்கும், வாழ்த்திய திரு. கட்டபொம்மனுக்கும் மற்றும் தீப்பெட்டிக்கும் நன்றிகள் பல..

வால்பையன் said...

அப்படியே தண்ணி அடிப்பதை விடுவதற்கும் ஒரு வழி சொல்லுங்க!

Vishnu - விஷ்ணு said...

ஏன் வால் அண்ணா அடிகுழாயில தண்ணி அடிக்கிறது நல்ல உடற்பயிற்சி தானே.

முக்கோணம் said...

பின்னூட்டம் இட்ட நண்பர் விஷ்ணு அவர்களுக்கும், உயர்திரு. வால்பையனுக்கும் நன்றி....

வால்பையன் said...

//ஏன் வால் அண்ணா அடிகுழாயில தண்ணி அடிக்கிறது நல்ல உடற்பயிற்சி தானே.//

நிஜம் தான்!
ஒயின்ஷாப்பில் தண்ணி அடிப்பதும் நல்ல மனப்பயிற்சின்னு யாராவது சொன்னா இன்னும் சந்தோசம்!

இது நம்ம ஆளு said...

அருமை.தொடர்ந்து கலக்குங்க

Admin said...

nalla news anna

KING RAMSHAN said...

Very Good Post!!

King Ramshan said...

very very good Post!

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...