May 12, 2009

உலகிலேயே மிகச் சிறிய தியானம்...!

ஆம். இந்த தியானம் தான் உலகிலேயே மிகக் குறுகிய நேரத்தில் செய்யக் கூடிய தியானம்.

இதனை செய்ய ஒரு நிமிடம் கூட தேவையில்லை.

வெறும் அரை நிமிடம் போதுமானது.

என்ன அந்த தியானத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா..?

இது ஓஷோ அவர்கள் சொன்ன தியானம் தான்.

இந்த தியானத்தை எதிர்பாராமல் திடீரென செய்ய வேண்டும். அதில் தான் இந்த தியானத்தின் மொத்த நுட்பமும் அடங்கியுள்ளது.

எங்காவது நடந்து போய் கொண்டிருக்கிறோம், திடீரென நின்று விட வேண்டும்.

அரை நிமிடம் போதும்!

அப்படியே உறைந்தது போல் ஆக வேண்டும். நமது விழிப்புணர்வில் மட்டும் ஐக்கியமாகி விட வேண்டும்.

(இதனை சாலையிலோ வாகனங்கள் வரும் வழியிலோ நின்று கொண்டு செய்ய கூடாது என்பது அனைவரும் அறிந்ததே!!!)

திடீரென நாம் செய்யும் இந்த நிகழ்வு நமது உடல் இயக்கத்தை மட்டும் நிறுத்துவதில்லை. மனமும் உடனே நின்று விடுகிறது.

நமக்குள் உருவான அந்த சக்தி இந்த திடீர் நிறுத்தத்தால் நமது விழிப்புணர்வுக்கு செல்கிறது.

அப்போது தியானம் நிகழ்கிறது.

இந்த தியானத்தை கண்டு பிடித்தவர் ரஷ்ய ஞானி ஜார்ஜ் குருட்ஜீஃப்.

இந்த தியானத்தை ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு முறை செய்ய வேண்டும். அதிக பட்சம் எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆக இந்த தியானத்தை செய்ய ஒரு நாளைக்கு மூன்று நிமிடங்கள் ஒதுக்கினால் போதுமானது.

மேலும் எளிய தியான விளக்கத்தை வரும் பதிவில் பார்ப்போம்.

அது வரை கீழே உள்ள தமிழிஷ்-ஷில் ஓட்டுப் போடவும் முந்தைய பதிவுகளை பார்க்க கீழே உள்ள இணைப்புகளை
கிளிக் செய்யவும் தவற வேண்டாம்.

15 comments:

கடைக்குட்டி said...

நல்லா இருக்குங்க.. முயற்சி பண்ணி பாப்போம்..

வால்பையன் said...

இப்படி பண்ணா என்ன நடக்கும்!

அமர பாரதி said...

//எங்காவது நடந்து போய் கொண்டிருக்கிறோம், திடீரென நின்று விட வேண்டும்.


அரை நிமிடம் போதும்!


அப்படியே உறைந்தது போல் ஆக வேண்டும். நமது விழிப்புணர்வில் மட்டும் ஐக்கியமாகி விட வேண்டும்.//

உடனே பின்னால வர்ற வாகனம் நம்பள அரைச்சுட்டுப் போயிடும். அப்புறம் முக்திதான்.

Vishnu - விஷ்ணு said...

சூப்பர் டெக்னிக்.

// நமது விழிப்புணர்வில் மட்டும் ஐக்கியமாகி விட வேண்டும் //

அப்படினா?

// ரஷ்ய ஞானி ஜார்ஜ் குருட்ஜீஃப்.

யாரு இவரு.

முக்கோணம் said...

வாங்க கடைக்குட்டி..நல்லா இருக்கீங்களா..?

முக்கோணம் said...

உயர்திரு வால் பையன் அவர்களே..இப்படி செய்தால் என்ன நடக்கும் என்று கேட்டிருக்கிறீர்கள்..
அதற்கு என்னுடைய முந்தைய பதிவான "தியானத்தால் ஏற்படும் நன்மைகள்" ஐ படிக்கவும்.

முக்கோணம் said...

ஹஹ்ஹா..அமரபாரதி! இந்த தியானத்தை சாலையில் நடந்து போகும் போது செய்யக் கூடாது..!

முக்கோணம் said...

வாங்க விஷ்ணு..விழிப்புணர்வு என்பது வெறுமையாய் நமது உணர்வை மட்டுமே கவனிப்பது. அதைப் பற்றியும், ஜார்ஜ் குருட்ஜீஃப் பற்றியும் ஒரு தனி பதிவு போட்டுரலாம் விடுங்க..!
எவ்வளவோ பண்ணிட்டோம், இதை பண்ண மாட்டோமா..?

நிகழ்காலத்தில்... said...

மனதை நிகழ்காலத்திலேயே நிறுத்தக்கூடிய
அருமையான தியானமுறை.. தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்

முக்கோணம் said...

நன்றி அறிவே தெய்வம்..தங்கள் ஆதரவு தொடரட்டும்..

அமர பாரதி said...

// இந்த தியானத்தை சாலையில் நடந்து போகும் போது செய்யக் கூடாது..!// நீங்க தான நடந்து போகும் போது செய்யனும்னு சொன்னீங்.

தீப்பெட்டி said...

//அப்படியே உறைந்தது போல் ஆக வேண்டும். நமது விழிப்புணர்வில் மட்டும் ஐக்கியமாகி விட வேண்டும்.//

'விழிப்புணர்வில் ஐக்கியமாவது' அப்படீன்னா என்ன பாஸ்...

முக்கோணம் said...

விழிப்புணர்வில் ஐக்கியமாகி விடுவது என்பது நிகழ்காலத்திற்கு வந்து அப்போது உங்களுக்கு ஏற்படும் உணர்வை கவனிப்பது ஆகும். விழிப்புணர்வு பற்றிய விளக்கம் விரைவில் ஒரு தனி பதிவாக வெளியாகும் தீப்பெட்டி பாஸ்..

யூர்கன் க்ருகியர் said...

என்னோவோ பண்ணுங்க ..நல்லாருந்தா சரி !!

நாமக்கல் சிபி said...

ரொம்ப நாளா நான் தேடிகிட்டிருந்த வழி எனக்கு கொஞ்சம் தட்டுப்பட்ட மாதிரி தெரியுது!

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...