Nov 23, 2009

அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி பதில்




ஐயா, நீங்கள் பெண்களை உயர்த்திப் பேசி அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். இது சரியா?


நீங்கள் இந்த உலகத்திற்கு எப்படி வந்தீர்கள்? உங்களை ஒரு பெண் அல்லவா தன் வயிற்றில் பத்து மாதம் வைத்து காத்து உருவாக்கினாள்! 
அப்பொழுது அவள் உண்ட உணவை, அவள் சுவாசித்த காற்றை அல்லவா நீங்கள் பங்கிட்டு கொண்டிருந்தீர்கள்? மேலும் முதன் முதலில்
இந்த உலகிற்கு வந்தீர்களே, அங்கு உங்களுக்கு தன் ரத்தத்தை அல்லவா பாலாக மாற்றி முதல் உணவாக அளித்தாள்.


நாம் கடைகளில் சென்று ஒரு புதிய வாகனம் வாங்கும் பொழுது அந்தக் கம்பெனியே உங்களுக்கு முதல் பெட்ரோலை இட்டு நிரப்பி நீங்கள் சிறிது தூரம் வாகனத்தை இயக்குவதற்கு உதவி செய்வது போல், தாய் தானே உங்களுக்கு தன் ரத்தத்தை பாலாக்கி முதல் உணவு (Fuel) அளித்து நீங்கள் உயிர் வாழ உதவினாள். அதற்கு மேலும் பல மாதங்கள் அந்தத் தாயின் பாலைக் குடித்து தானே வளந்தீர்கள்.


"அந்தப் பெண்மை தானே உங்களுக்கு வாழ்க்கைத் துணையாகவும் வந்து வாழ்நாள் முழுவதும் உங்கள் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு நீங்கள் வீடு பேறு அடையவும் உதவுகிறாள். இயதில் ஏதாவது ஒன்றை உங்களால் மறுக்க முடியுமா? இவ்வளவு பெருமை வாய்ந்த பெண்ணினத்தைப் போற்றுவதில் உங்களுக்கு கஞ்சத்தனமும் பொறுக்க முடியாமையும் ஏன் வர வேண்டும்?" 

- நன்றி: அருள் தந்தையின் பதில்கள் பாகம் 2 - வேதாத்திரி பதிப்பகம். 

2 comments:

Abdul Rahman said...

I want to join one ashram for medition in chennai.If you know then suggest to me

முக்கோணம் said...

அன்பு நண்பரே, நான் சென்னைவாசியல்லாததால் அங்கிருக்கும் தியான மையங்களை சரியாக தெரியவில்லை. இருப்பினும் இணையத்தில் சென்னையிலுள்ள அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனவளக்கலை மன்றங்கள் பற்றி http://www.vethathiri.org/Chennai/ என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம். நன்றி.

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...